கோவிந்தம் பாளையம்- டூ வீலர்கள் நேருக்கு நேர் மோதல். பெண் படுகாயம்.

கோவிந்தம் பாளையம் -டூ வீலர்கள் நேருக்கு நேர் மோதல். பெண் படுகாயம்.
கோவிந்தம் பாளையம்- டூ வீலர்கள் நேருக்கு நேர் மோதல். பெண் படுகாயம். கரூர் மாவட்டம் மன்மங்கலம் தாலுகா கடம்பன்குறிச்சி அருகே சின்ன வரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் மனைவி ஈஸ்வரி வயது 42. இவர் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:30 மணி அளவில் சின்ன வரப்பாளையம் - தளவாபாளையம் சாலையில் டூவீலரில் சென்றார். அப்போது கோவிந்தம் பாளையம் வாட்டர் டேங்க் அருகே சென்றபோது எதிர்திசையில் வேகமாக வந்த மற்றொரு டூவீலர் ஈஸ்வரி டூ வீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஈஸ்வரிக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் உடனடியாக அவரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் குறித்து ஈஸ்வரி அளித்த புகாரில் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story