மேலப்பாளையத்தில் புதிய உற்பத்தி கூடம் திறப்பு விழா

X
லெஜென்ட் லிஃப்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் புதிய உற்பத்தி கூடம் திறப்பு விழா மேலப்பாளையம் மாட்டுச்சந்தை அருகில் வைத்து இன்று நடைபெற்றது. இதில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவங்கி வைத்தார். மேனேஜிங் டைரக்டர் கட்சி மைதீன், ஜெனரல் மேனேஜர் காஜா மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் கனி, துணை தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, துணை மேயர் ராஜு, மேலப்பாளையம் மண்டல தலைவர் கதீஜா இக்லாம் பாசிலா உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

