அடிப்படை வசதிகள் செய்து தர கோரி காத்திருப்பு போராட்டம்

அடிப்படை வசதிகள் செய்து தர கோரி காத்திருப்பு போராட்டம்
X
6வது வார்டு திருவளர்சோலை பகுதியில் தெருவிளக்கு, சுகாதாரமான குடிநீர், பொதுக்கழிப்பிடம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரிக்கை
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு திருவளர்சோலை பகுதியில் தெருவிளக்கு, சுகாதாரமான குடிநீர், பொதுக்கழிப்பிடம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஸ்ரீரங்கம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்வதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர் ஆனால் அதற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடன்படாததால் மாநகராட்சி அதிகாரிகள் திருவளர்ச்சோலை பகுதியில் அடிப்படை வசதிகள் சரிவர உள்ளனவா என ஆய்வு செய்ய புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரும் வரை இந்த போராட்டம் தொடரும் என அப்பகுதி மக்களுக்கு கூறினர்
Next Story