அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா

X
Komarapalayam King 24x7 |10 Sept 2025 8:52 PM ISTகுமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நினைவாக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நினைவாக ஆசிரியர் தினம் நடந்தது. தலைமை ஆசிரியை காந்தரூபி தலைமை வகித்தார். முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவிகளுக்கு, பேச்சுப்போட்டி, மாறுவேடப் போட்டி, கட்டுரை போட்டி, நடன போட்டிகள், நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. ஆசிரியர் தினத்தையொட்டி, முன்னிட்டு தலைமையாசிரியை மற்றும் அனைத்து ஆசிரியர், ஆசிரியைகளுக்கு பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் பொன்னாடை அணிவித்து, புத்தகங்கள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
Next Story
