கலையரங்கம் கட்டுவதற்கான பூமி பூஜை, எம்எல்ஏ பங்கேற்பு

கலையரங்கம் கட்டுவதற்கான பூமி பூஜை, எம்எல்ஏ பங்கேற்பு
X
கலையரங்கம் கட்டுவதற்கான பூமி பூஜை, எம்எல்ஏ பங்கேற்பு
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அச்சிறுபாக்கம் தெற்கு ஒன்றியம்,தொழுபேடு, ஆத்தூர் மற்றும் முருங்கை ஊராட்சி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தொழுபேடு, ஆத்தூர் மற்றும் முருங்கை பகுதியில் கலையரங்க கட்டிடம் அமைத்து தர வேண்டி மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் அவர்களிடம் மனு அளித்தனர்.. அதனை தொடர்ந்து அவரது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 23.10 இலட்சம் நிதி ஒதுக்கி தொழுப்பேடு, ஆத்தூர் மற்றும் முருங்கை பகுதியில் கலையரங்க கட்டிடம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்து கொண்டு அடிக்கல் நட்டு பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கி பூஜையை துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் அச்சிறுபாக்கம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் டாக்டர்.ரங்கராஜன், ஊராட்சி மன்ற தலைவர், மாவட்ட பிரதிநிதிகள்,ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்..
Next Story