இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலிய அரசின் அமைச்சர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

X
பாலஸ்தீனத்தில் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும், இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செப்டம்பர் 8 முதல் 10 வரை இந்தியாவிற்கு மூன்று நாள் வருகை தரும், இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச்சை வரவேற்கும் பாஜக அரசாங்கத்தின் திட்டத்தை கண்டித்தும், பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன குழந்தைகளைக் கொன்ற இனப்படுகொலைக்கு வழிவகுத்த ஒரு குற்றவியல் அரசின் முகத்தை இஸ்ரேலிய சியோனிச ஆட்சி கொண்டுள்ளது. இத்தகைய குற்றவியல் அரசின் பிரதிநிதிகளை வரவேற்று அவர்களுடன் வணிக கூட்டாண்மையை ஏற்படுத்துவதன் மூலம், பாஜக அரசு சர்வதேச சமூகத்தின் பார்வையில் இந்தியாவை அவமதிக்கிறது. இதுபோன்ற முயற்சிகளில் இருந்து ஒன்றிய அரசு விலக வேண்டும் என வலியுறுத்தி, இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச்சின் வருகைக்கு எதிராக "பெசலெல் ஸ்மோட்ரிச் திரும்பிச் செல்லுங்கள்" என்ற முழக்கத்துடன், எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பாக புதன்கிழமை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, கிளை தலைவர் ஜெனிபர் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் வசந்த் கண்டன உரையாற்றினர். கிளை நிர்வாகிகள் நவசூர்யா, பகவதி, சிவமூர்த்தி, மதன், மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

