தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு தஞ்சாவூர் மாவட்டத் தலைவராக ஹெச்.அப்துல்நசீர் தேர்வு
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு, தஞ்சை மாவட்டக்குழு கூட்டம் தஞ்சையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட துணைத்தலைவர் ஜாஹிர்உசேன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பி.செந்தில்குமார், ஹெச்.அப்துல்நசீர், என்குருசாமி, எம்.ராம், எஸ்.எம்.ஜெயினுலாபுதீன், அந்தோணி, ஜஸ்டின் சில்வஸ்டர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இக்கூட்டத்தில், தஞ்சை மாநகரில் வடக்குவாசல், பாத்திமா நகர், முனியாண்டவர் காலனி பகுதிகளில் கிளைகளை உருவாக்குவது, "இந்திய கருத்தியல்களும், இன்றைய நாட்டு நிலைமையும்" என்ற தலைப்பில் திறந்தவெளி கருத்தரங்கம் நடத்துவது, தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். கல்விக் கொள்கையில் அரசியல், மதங்களை புகுத்துவதற்கும், சுதந்திர தின உரையில் ஆர்.எஸ்.எஸ். பற்றி பிரதமர் மோடி பேசியதற்கும் கண்டனம் தெரிவிப்பது" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், புதிய மாவட்டத் தலைவராக ஹெச்.அப்துல்நசீர், பொருளாளராக எம்.ராம், துணைத்தலைவராக ஜஸ்டின் சில்வஸ்டர், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினராக அந்தோணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
Next Story



