கிருஷ்ணாபுரம் பள்ளிக்கு அபாகஸ் உபகரணங்கள் வழங்கிய முகநூல் நண்பா்

கிருஷ்ணாபுரம் பள்ளிக்கு அபாகஸ் உபகரணங்கள் வழங்கிய முகநூல் நண்பா்
X
பள்ளிக்கு அபாகஸ் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் அரசு நிதியுதவி பெறும் திருநாவுக்கரசு தொடக்கப் பள்ளியில் அபாகஸ் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் முகநூல் நண்பா்களான மணிகண்டன் முருகேசன், அவரது குடும்பத்தினா் மிதுன், சுருதி ஆகியோா் வழங்கிய ரூ.47,000 மதிப்பிலான அபாகஸ் உபகரணங்கள் 63 மாணவா்களுக்கு வழங்கப்பட்டன. இதில் பள்ளிச் செயலா் செல்லம்மாள், பள்ளி கல்விக் குழு உறுப்பினா் ரெங்கநாயகி, தலைமையாசிரியா் (பொ) சுப்புலெட்சுமி, நல்லாசிரியா் பழனிக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Next Story