கடைக்காரர் கைது

X
சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் பிரகாஷ், 43; மளிகை கடை உரிமையாளர். இவருக்கு சொந்தமான மோட்டார் கொட்டகையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து கடையில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் மற்றும் போலீசார் நேற்று காலை அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 82 கிலோ ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, வழக்கு பதிந்து பிரகாஷை கைது செய்தனர்.
Next Story

