உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கலெக்டர் ஆய்வு 

  உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கலெக்டர் ஆய்வு 
X
குழித்துறை
குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் குழித்துறை வி.எல்.சி ஆடிட்டோரியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று  நடைபெற்றது.  முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர்  அழகுமீனா, இ.ஆ.ப, அவர்கள்  நேரில் பார்வையிட்டு,  தெரிவிக்கையில், - குமரியில் 15.07.2025 முதல் 09.09.2025 வரை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 94,714  மனுக்கள் பெறப்பட்டது.  இதில்   6858 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு, அதற்கான ஆணை  வழங்கப்பட்டுள்ளது.  குழித்துறை நகராட்சிக்குட்பட்ட 10, 11, 12 உள்ளிட்ட வார்டுகளுக்கு வி.எல்.சி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற முகாமில் பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களிலும் உரிய ஆவணங்கள் இணைத்து இருப்பதை வாங்கப்படுகிறதா, சரியான முறையில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. என கூறினார்.
Next Story