கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை
X
நிலக்கோட்டை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியை அடுத்த எல்லைசாமிபுரத்தை சேர்ந்த மாரியப்பன்(45). இவரது மனைவி பழனியம்மாள் மற்றும் சூர்யா இருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களது திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக கணவர் மாரியப்பன் இருப்பதால் மனைவி பழனியம்மாள் மற்றும் கள்ளக்காதலன் சூர்யா இருவரும் கணவர் மாரியப்பன் கழுத்தை நெறித்து கொலை செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைவில் சென்று மாரியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story