லட்சுமி நகரில் குடிநீர் தொட்டியை சேதப்படுத்திய மர்மநபர்கள்

X
காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் அமராவதி கூட்டுக்குடி நீர் திட்டத்தின் மூலம் பொதுமக்க ளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் வார்டு பகுதிகளில், தினமும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய ஆழ்துளை கிணறு அமைத்து, 5 ஆயிரம், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தொட்டிகள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், லட்சுமி நகரில் 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி ஒன்று நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று மர்ம நபர்கள் சிலர் அந்த குடிநீர் தொட்டியை முழுவதுமாக உடைத்து சேதப்படுத்தினர். மேலும், கீழே தள்ளி உடைத்து நொறுக்கினர். இதனால் அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யும் பணி பாதிக்கப்பட்டது. இதை கவனித்த அப்பகுதி மக்கள், இதுபற்றி நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், அதிகாரிகள் அங்கு சென்று, சேதமான குடிநீர் தொட்டியை பார்வையிட்டனர். அப்போது குடிநீர் தொட்டியை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். மேலும், சேதமடைந்த தொட்டியை அகற்றிவிட்டு, புதிதாக குடிநீர் தொட்டி அமைக்கப்படும் என்று நகராட்சி தலைவர் சூர்யபிரகாஷ் தெரிவித்தார்.
Next Story

