பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பிரசாரக் கூட்டத்தில் பாதியிலே வெளிய பெண்கள்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பிரசாரக் கூட்டத்தில் பாதியிலே  வெளிய பெண்கள்
X
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பிரசாரக் கூட்டத்தில் பாதியிலே வெளிய பெண்கள்
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பிரசாரக் கூட்டத்தில் பாதியிலே வெளிய பெண்கள். செங்கல்பட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், "மீண்டும் கிராமங்களை நோக்கி" என்ற பெயரில் இன்று திண்ணை பிரச்சாரம் நடத்தி வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேட்டில் நடந்த கிராம அளவிலான கூட்டத்தில் அவர் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, கூட்டத்தில் பங்கேற்றிருந்த பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்தக் கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டிருந்தனர். ராமதாஸ் உரையாற்றத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பெண்கள் எழுந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. பா.ம.க.வின் முக்கிய தலைவர்களான ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், ராமதாஸ் இந்த திண்ணை பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
Next Story