வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவர் கைது

பாலக்கோடு அருகே தாசன்பெயில் கிராம பகுதியில் மின்வேலி அமைத்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவர் கைது-  1.50 லட்சம் ரூபாய் அபராதம்.
தர்மபுரி மாவட்டம் இன்று பாலக்கோடு அருகே தாசன்பெயில் கிராம வன பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதாக பொதுமக்களின் புகாரின் பேரில் பாலக்கோடு வனசரக அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான வனத்துறையினர், இன்று சொக்கன் கொட்டாய் காப்புகாடு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அப்பகுதியில் மின்வேலி அமைத்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற ஒருவரை பிடித்து விசாரித்ததில் தாசன்பொயில் கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பதும், வன விலங்குகளை வேட்டையாடி வருவதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவரை கைது செய்த வனதுறையினர் மாவட்ட வன அலுவலர் ராஜங்கம் பரிந்துரையின் படி தலா 1.50லட்சம்  ரூபாய் அபராதம் விதித்தனர். வன விலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாலக்கோடு வனசரக அலுவலர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்
Next Story