நீரா பானத்துக்கு அனுமதி கொடுத்தோம் - கள்ளு இறக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் – இபிஎஸ் !
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலைப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு சங்க நிர்வாகிகளுடன் நேற்று கலந்துரையாடினார். அதிமுக ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள், திருமண உதவித் திட்டத்தில் பட்டு சேலை வழங்கப்பட்டதையும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவை தொடரும் என்றும் அவர் கூறினார். மேலும், மாவட்டங்கள் உருவாக்கம், தடுப்பணைகள் கட்டுதல், ஏரிகள் தூர்வாருதல், அத்திக்கடவு-அவினாசி திட்டம், கால்நடை பூங்கா, ஆராய்ச்சி மையம் போன்ற பல்வேறு திட்டங்களை அதிமுக ஆட்சியில் செயல்படுத்தியதாக நினைவூட்டினார். தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கியதோடு, நீரா பானம் தயாரிக்க அனுமதி வழங்கியதையும் இபிஎஸ் குறிப்பிட்டார். கள்ளு இறக்குவது தொடர்பில் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ள நிலையில், அது பொதுமக்களின் நலன் சார்ந்த விஷயமாக இருப்பதால் சூழ்நிலைக்கு ஏற்ப ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார். தற்போதைய அரசு மிகுந்த கடன் வாங்கி, அதிக வரி வசூலிக்கிறது என்றும், அதிமுக ஆட்சியில் கோவைக்கு பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் வலியுறுத்தினார்.
Next Story



