கோவை அரசு மருத்துவமனையில் வீல் சேர் விவகாரம்: முதல்வர் விளக்கம்

X
கோவை அரசு மருத்துவமனையில் வீல் சேர் இல்லாமல் நோயாளியை தோளில் தூக்கி ஆட்டோவில் எடுத்துச் சென்ற காட்சி சமுதாயத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சௌரிபாளையம் பகுதிக்காரர் காளிதாஸ், தனது தந்தை காலில் காயம் ஏற்படுவதால் மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். மூன்றாவது மாடியிலிருந்து வீல் சேர் கேட்கும் போது பணம் கோரி வழங்காததால் அவர் தந்தையை தூக்கி எடுத்து சென்றார். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கிறிஸ்டல் ஊழியர்கள் இருவரும் ஐந்து நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி, போதுமான வீல் சேர், ஸ்ட்ரெச்சர் உள்ளதாகவும், கூடுதலாக வாங்குவதற்கும் ஆர்டர் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஊழியர்கள் நோயாளிகளிடம் கோபமாக நடக்கக் கூடாது என்றும், மருந்துகள் தட்டுப்பாடு இல்லை என்றும் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
Next Story

