கோவை: மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரசாரத்தில் வால்பாறையில் எடப்பாடி பழனிசாமி உரை !
பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற கோஷத்துடன் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். இதில் நேற்று பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளில் பிரசாரம் செய்தார். வால்பாறை தொகுதிக்குட்பட்ட ஆனைமலை பஸ் நிலையத்தில் பொதுமக்களைச் சந்தித்த அவர், வால்பாறை அ.தி.மு.க.வின் கோட்டை எனவும், தி.மு.க. அரசு தேர்தல் அறிவிப்புகளை நிறைவேற்றாமல் செயல்படுகிறது எனவும் குற்றம்சாட்டினார். தாலிக்கு தங்கம், திருமண உதவி போன்ற அ.தி.மு.க. அரசு அறிமுகப்படுத்திய திட்டங்கள் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும், தி.மு.க. ஆட்சியில் விலைவாசி அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அ.தி.மு.க. ஐ.சி.யூ.வில் உள்ளது என உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதை விமர்சித்த பழனிசாமி, உண்மையில் தி.மு.க.தான் வெண்டிலேட்டரில் உள்ளது, இன்னும் ஏழு மாதங்கள்தான் உயிர் என்று தாக்கம் செய்தார். கூட்டணி கட்சிகளை ஏமாற்றி விழுங்கிக்கொண்டு இருப்பது முதல்வர் மு.க. ஸ்டாலின் என்றும், உஷாராக இருந்தால்தான் கூட்டணி கட்சிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்றும் எச்சரித்தார்.
Next Story



