ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க வேண்டும் : வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

X
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக சுமார் ஒரு லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். பல இளைஞர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைகளுக்கு அடிமையாகி, சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. எனவே, மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை உடனடியாக திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், புதிதாக துவங்கப்பட்டுள்ள கார் தொழிற்சாலையில் உள்ளூர் இளைஞர்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க விட்டால் சென்னையில் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
Next Story

