தவில் நாதஸ்வரம் பயிற்சி பெற அழைப்பு

தவில் நாதஸ்வரம் பயிற்சி பெற அழைப்பு
X
மதுரை அழகர் கோவிலில் தவில் மற்றும் நாதஸ்வரம் பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
மதுரை அழகர்கோயிலில் உள்ள சோலைமலை முருகன் கோயிலில் தவில், நாதாஸ்வரம் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்கை நடைபெறுகிறது. 3 ஆண்டுகள் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கான கல்வி தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி, வயது 13 முதல் 20வயதிற்குள் உள்ள இந்து மதத்தினை சேர்ந்த ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம் | பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் தோறும் 10,000 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. உணவு,உடை, தங்குமிடம் மருத்துவ வசதி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும். சேர விருப்பம் உள்ளவர்கள் கோயில் நிர்வாக அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
Next Story