சீத்தப்பட்டி காலனி நடந்து சென்ற மூதாட்டி மீது கார் மோதி விபத்து.மூதாட்டி படுகாயம்.

சீத்தப்பட்டி காலனி நடந்து சென்ற மூதாட்டி மீது கார் மோதி விபத்து.மூதாட்டி படுகாயம்.
சீத்தப்பட்டி காலனி நடந்து சென்ற மூதாட்டி மீது கார் மோதி விபத்து.மூதாட்டி படுகாயம். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா மலைக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் செங்கான் மனைவி கோட்டம்மாள் வயது 65. இவர் புதன்கிழமை அன்று காலை 11:30 மணி அளவில் சீத்தப்பட்டி காலனி பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்தகார் நடந்த சென்ற கோட்டம்மாள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் அறிந்த கோட்டம்மாள் கணவர் செங்கான் அளித்த புகாரில் அரவக்குறிச்சி காவல் துறையினர் கார் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story