கிழக்கு காலணியில் நீரிழிவு
கிழக்கு காலணியில் நீரிழிவு & ரத்த கொதிப்பு நோயால் அவதிப்பட்டவர் விஷம் குடித்து தற்கொலை. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா கிழக்கு காலனியை சேர்ந்தவர் சக்திவேல் வயது 38. இவருக்கு கடந்த 5 மாதங்களாக நீரிழிவு & ரத்த அழுத்த நோய் இருந்து வந்தது. இதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்டும் அவருக்கு பூரண குணமடையவில்லை இதனால் விரக்தி மனப்பான்மையில் இருந்து வந்த அவர் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி அளவில் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சம்பவம் குறித்து சக்திவேல் மனைவி விஜயா வயது 36 என்பவர் அளித்த புகாரில் மாயனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்
Next Story




