பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது

X
பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது பெரம்பலூர் அருகே 10ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை கடத்தி சென்று வலுகட்டாயமாக பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பெரம்பலூர் அருகே செட்டிக்குளத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன் மகன் ஜெகதீசன் (20). இவர் நேற்று முன்தினம் (10ம்தேதி) பாடாலூர் அரசு மாதிரி பள்ளி மதிய இடைவேளையில் வெளியே வந்த 10ம்வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்று ஜெகதீசன் பாடாலூரில் உள்ள தனது வீட்டில் வைத்து வலுகட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அன்று இரவு 11மணிக்கு மேல் அந்த பள்ளி மாணவியை பாடாலூர் சந்தையில் விட்டு விட்டு ஜெகதீசன் சென்றுவிட்டார். இது பற்றி தகவலறிந்த பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ஜெகதீசனை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
Next Story

