வேனில் சீருடை சிக்கியதால் சிறுமி பலி

X
மதுரை வாடிப்பட்டி குட்லாடம்பட்டி அருவி அருகே உள்ள கரடிகல் பகுதியை சேர்ந்த தென்னை மரம் ஏறும் கூலித்தொழிலாளி கோட்டைச்சாமியின மூத்த மகள் நவீசா( 8) என்பவர் டி.மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 3ம் வகுப்பு படித்தார். நேற்று (செப் .11)பள்ளி முடிந்து தனியார் வாடகை வேனில் வந்து வீட்டின் முன் இறங்கினார். அப்போது வேன் கதவை மூடிய நவிசாவின் சீருடை கதவில் சிக்கியதால் கீழே விழுந்த நவிசா மீது வேனின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் இறந்தார். வேன் டிரைவர் பூமிராஜாவை (22 )வாடிப்பட்டி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
Next Story

