அடிக்கல் நாட்டு விழா

X
திருக்கோவிலுார் நகராட்சியில் 22.20 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.நகராட்சி கமிஷனர் திவ்யா வரவேற்றார். நகர மன்ற தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். ரவிக்குமார் எம்.பி., முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி, சார் ஆட்சியர் ஆனந்த் குமார் சிங், நகர மன்ற துணைத் தலைவர் உமாமகேஸ்வரி குணா மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர் பொன்முடி எம்.எல்.ஏ., புதிய பஸ் நிலையத்திற்கான பூமி பூஜையில் பங்கேற்று அடிக்கல் நாட்டினார் .
Next Story

