பேராவூரணி பகுதியில் புதிய கட்டிடங்கள் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் திறந்து வைத்தார்

X
- தஞ்சை மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 3 கட்டிடங்களை உயர்கல்வி துறை அமைச்சர் கோவி. செழியன் புதன்கிழமை மாலை திறந்து வைத்தார். பேராவூரணி அருகே குருவிக்கரம்பையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூபாய் 12 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உணவு தானிய சேமிப்புக் கிடங்கு மற்றும் பொது விநியோக அங்காடி கட்டிடத்தை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் முன்னிலையில், உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.பழனிவேல், திமுக சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர்கள் மு.கி முத்து மாணிக்கம் (வடக்கு), வை.ரவிச்சந்திரன் (தெற்கு), பேராவூரணி ஒன்றிய திமுக செயலாளர்கள் க.அன்பழகன் (தெற்கு), கோ.இளங்கோவன் (வடக்கு), தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் குமரேசன், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) தனி அலுவலர் சீத்தாராமன், பேராவூரணி வட்டாட்சியர் நா.சுப்பிரமணியன், சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகேந்திரன்( வ.ஊ), மனோகரன்(கி.ஊ), கூட்டுறவு சார்பதிவாளர் தாரணி, கூட்டுறவு சங்க செயலாளர் மாதவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பேராவூரணி அருகே கொளக்குடி ஊராட்சியில் ரூபாய் 12 லட்சத்து 56 ஆறாயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொது விநியோக கட்டிடத்தையும், களத்தூர் ஊராட்சியில் 23 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கிராம நூலக கட்டிடத்தையும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
Next Story

