அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

மேளதாளம் முழங்க யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோபுர விமானம், மூலவர், ஆஞ்சநேயர் சுவாமிக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மஹா தீபாரதனை காட்டப்பட்டு , பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
பெரம்பலூர் அருகே உள்ள பிரம்மதேசம் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாளிக்கும் அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா இன்று வெக்கு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் தரிசனம் செய்தனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பிரம்மதேசம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு லெட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில். இத்திருக்கோயில் புணரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவானது செப்.11 ம் தேதி விக்னேஸ்வர பூஜை , வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் உள்ளிட்ட பூஜை களோடு யாக வேள்வி தொடங்கியது. தொடர்ந்து மருந்து சாற்றுதல், விஷ்ணு சகஸ்ரநாமம், நாடி சந்தானம், வேத பாராயணம் பூஜை களோடு மூன்று கால யாக வேள்வி பூஜையும், மஹாபூர்ணாஹுதியும் நடைபெற்றது. இதனையடுத்து மேளதாளம் முழங்க யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோபுர விமானம், மூலவர், ஆஞ்சநேயர் சுவாமிக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மஹா தீபாரதனை காட்டப்பட்டு , பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரம்மதேசம், வி.ஆர் எஸ்.எஸ்.புரம், வாலிகண்டபுரம், வல்லாபுரம், வேப்பந்தட்டை, அனுக்கூர், குடிக்காடு, பெரம்பலூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.
Next Story