அச்சரப்பாக்கத்தில் உள்ள டிரான்ஸ்பார்ம் வெடித்து தீ விபத்து

X
அச்சரப்பாக்கத்தில் உள்ள டிரான்ஸ்பார்ம் வெடித்து தீ விபத்து செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கத்திலிருந்து பள்ளிப்பேட்டை செல்லும் சாலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கே அமைக்கப்பட்டிருக்கும் டிரான்ஸ்பார்மர்களில் அச்சிறுப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் செல்லும் மிகப்பெரிய டிரான்ஸ்பார்ம் அதிக சத்தங்களுடன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.அப்போது அருகில் பராமரிப்பு பணியில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.தகவல் அறிந்து வந்த மேல்மருவத்தூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.அச்சரப்பாக்கம் துணை மின் நிலையத்தில் காலைப் பொழுதில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Next Story

