கோவையில் சமூக ஆர்வலர் சுல்தான் தாத்தா மரணம் !

கோவையில் சமூக ஆர்வலர் சுல்தான் தாத்தா மரணம் !
X
கோவையில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய காவல்துறைக்கு உறுதுணையாக செயல்பட்டு வந்த 87 வயது சமூக ஆர்வலர் சுல்தான் தாத்தா காலமானார்.
கோவையில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய காவல்துறைக்கு உறுதுணையாக செயல்பட்டு வந்த 87 வயது சமூக ஆர்வலர் சுல்தான் தாத்தா காலமானார். கோவையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகும் இடங்களில் தினமும் காலை முதல் மாலை வரை நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வந்தவர். இதனால் அவரை கோவையில் அறியாதவர்கள் யாருமில்லை. சமீபத்தில் உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இரணயம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் அவர் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருக்கு கோவை போக்குவரத்து காவலர்கள் நேரில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் நேற்று துடியலூர் பன்னிமடை பகுதியில் அவரின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
Next Story