கோவையில் சாலையில் கிடந்த வயர்களை சரி செய்து விபத்தை தவிர்த்த பெண் போக்குவரத்து காவலர் – வைரலாகும் வீடியோ!

X
கோவையில் தண்டு மாரியம்மன் கோவில் அருகே சாலையில் கேபிள், இன்டர்நெட் வயர்கள் ஆபத்தாக கிடந்தன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவானது. அப்பகுதியில் போக்குவரத்தை கட்டுப்படுத்தி வந்த பெண் போக்குவரத்து காவலர் ஒருவர், அந்த வயர்களை சேகரித்து தடுப்புச் சுவரில் வைத்து விபத்து தவிர்த்தார். சம்பவத்தை ஒரு வாகன ஓட்டியர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் காட்சிகள் வைரலாகி வருகின்றன. பொதுமக்கள் பாதுகாப்பிற்காக இத்தகைய சாலையில் கிடக்கும் வயர்களை நிரந்தரமாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பு.
Next Story

