காஞ்சியில் 'உயர்வுக்கு படி' நிகழ்ச்சி மாணவ - மாணவியருக்கு சேர்க்கை ஆணை

X
காஞ் சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், ' நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் ' உயர்வுக்கு படி' நிகழ்ச்சி நடந்தது . மாவட் ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உங்களுக்காக பல்வேறு உயர்கல்வி அரங்குகள் அமைக்கப்பட்டு வழங்கப்படும். உயர்கல்வி வழிகாட்டுதல் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், உயர் படிப்புக்கு தேர்வான மாணவ - மாணவியருக்கு, கலெக்டர் கலைச்செல்வி, சேர்க்கை ஆணைகளை வழங்கினார். கல்வி நிறுவனங்கள் சார்பில் மாணவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை மாணவ - மாணவியர் பார்வையிட்டனர். உயர்கல்வி வழிகாட்டுதல் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொண்டு அனைத்து மாணவர்களும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தினார். இந்நிகழ்வை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள், கலெக்டரிடம் விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் நளினி, மாவட்டக் கல்வி அலுவலர் எழில், மாணவ - மாணவியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story

