அரசு மகளிர் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கேட்டு ஈரோடு எம்.பி.யிடம் மனு

அரசு மகளிர் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கேட்டு ஈரோடு எம்.பி.யிடம் மனு
X
குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை உள்ளிட்ட அடிப்படை தேவைகள் செய்து தரக் கோரி ஈரோடு எம்.பி. வசம் மனு கொடுக்கப்பட்டது.
குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அதிக மாணவியர்கள் சேர்ந்ததால், கூடுதல் வகுப்பறை உள்ளிட்ட அடிப்படை தேவைகள் செய்து தரக் கோரி ஈரோடு எம்.பி. வசம் மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு பயின்ற மாணவிகள் எண்ணிக்கை ஆயிரத்து 376. இந்த ஆண்டு கல்வி பயிலும் மாணவிகள் எண்ணிக்கை ஆயிரத்து 676. இந்த ஆண்டு கூடுதலாக 300 மாணவியர்கள் சேர்ந்துள்ளனர். இதனால் கூடுதலாக 10 வகுப்பறைகள், 2 கழிப்பறைகள், 2 ஆய்வகங்கள், கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், பாடங்களுக்கு கூடுதலாக ஒரு முதுநிலை ஆசிரியர் தேவைப்படுகிறார். மேற்கண்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தர கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை தலைமை ஆசிரியை காந்தரூபி தலைமையில், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி உமா மகேஸ்வரி, துணைத் தலைவி சாந்தி, குமாரபாளையம் நகர தெற்கு பொறுப்பாளர் ஞானசேகரன் உள்பட பலர் கொடுத்தனர்.
Next Story