வாசுதேவநல்லூா் சிறப்புப் பள்ளியில் பாரதி நினைவு தினம்

X
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் மகாத்மா காந்தி சேவா சங்கத்தின் மனவளா்ச்சி குன்றியோா் சிறப்புப் பள்ளியில் மகாகவி பாரதியாா் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பாரதியின் படத்திற்கு, பள்ளியின் தாளாளா் தவமணி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். இதில், தலைமையாசிரியா் சங்கரசுப்பிரமணியன், சிறப்பாசிரியா்கள் சாந்தி, ஹெலன் இவாஞ்சிலின், இயன்முறை மருத்துவா் புனிதா, உதவி ஆசிரியா்கள் பூமாரி, சுடலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Next Story

