பாரதியாா் நினைவு தினம்: தமிழக அரசு சார்பில் மரியாதை!

X
எட்டயபுரத்தில் பாரதியாரின் 104ஆவது நினைவு தினத்தையொட்டி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசுத்துறை அதிகாரிகள், பாரதி அன்பா்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். எட்டயபுரத்தில் நேற்று பாரதியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு தமிழக அரசின் சார்பில் தாசில்தார் சுபா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் உதயசங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட தலைவர் ராமசுப்பு, மாவட்ட பொருளாளர் மணிமொழி நங்கை, கிளை தலைவர் பொன் பரமானந்தம், துணைச் செயலாளர் ஆறுமுகசாமி, கோவில்பட்டி கிளை செயலாளர் முத்துராஜ், மாவட்ட குழு உறுப்பினர் ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பாரதி முற்போக்கு வாலிபர் சங்க மாநிலத் தலைவர் காசி விஸ்வநாதன் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாரதியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவியர், ஆசிரிய- ஆசிரியைகள் அவரது ் பாடல்களை பாடி நினைவஞ்சலி செலுத்தினர். பாரதி முற்போக்கு வாலிபர் சங்க செயலாளர் பாலமுருகன் நன்றி கூறினார். பிராமணர் சங்கம் மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் விஸ்வநாதன், மாநில அமைப்பு செயலாளர் குமார், மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளர் விக்னேஷ் உள்பட சங்கத்தினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Next Story

