செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்பு துறை அமைப்பு துறை சார்பாக விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி

X
வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்பு துறை அமைப்பு துறை சார்பாக விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி மதுராந்தகம் ஏரியில் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம்,வடகிழக்கு பருவ மழை இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்பு மீட்புத்துறை சார்பாக வடகிழக்கு பருவ மழை விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி மதுராந்தகம் ஏரியில் மாவட்ட தீ அணைப்பு துறை அலுவலர் லட்சுமி நாராயணன் தலைமையில் மதுராந்தகம் கோட்டாச்சியர் ரம்யா முன்னிலையில் இந்த நடைபெற்றது. மழை வெள்ளத்தால் திடீரென ஏற்படும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உள்ளவர்களை எப்படி மீட்பது குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தால் வீட்டில் உள்ள வாட்டர் கேன்,பிளாஸ்டிக் கேன்,காய்ந்த மரங்கள், வாழைமரம் உள்ளிட்ட பொருட்களை வைத்து எப்படி கரை சேருவது வெள்ளத்தில் சிக்கி மயக்கமானவரை நீரில் மூழ்கியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை எப்படி அளிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு,மகேந்திரா சிட்டி, திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செய்யூர் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு இவர்கள் ஒத்திகை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதில் தனியார் கல்லூரி மாணவர்கள்,பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமனோர் கலந்து கொண்டனர்.
Next Story

