வாலாஜாபாத்தில் மழைநீர் சொட்டும் நிழற்குடையால் பயணியர் அவதி

வாலாஜாபாத்தில் மழைநீர் சொட்டும் நிழற்குடையால் பயணியர் அவதி
X
வாலாஜாபாத் பேருந்து நிலைய பயணியர் நிழற்குடை கட்டடத்தில் பழுதான கூரைகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் உள்ளிட்ட பல தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு வழிதடத்தில் வாலாஜாபாத் பிரதான சாலையில் இருந்து ஒரகடம் செல்லும் சாலையில் வாலாஜாபாத் பேருந்து நிலையம் உள்ளது. வாலாஜாபாத் சுற்றி உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், இந்த பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்கின்றனர். இதேபோல, வாலாஜாபாதில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு வருவோரும், வாலாஜாபாத் பேருந்து நிலையம் வந்து பயணிக்கின்றனர். இப்பேருந்து நிலையத்தில், 2011 - 12ம் ஆண்டு, அப்போதைய அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 25 லட்சம் ரூபாய் செலவில் கூரையிலான பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. இந்த நிழற்குடைக்கான கூரையில் தற்போது ஆங்காங்கே ஓட்டை ஏற்பட்டுள்ளது. இதனால், மழை நேரங்களில் மழைநீர் சொட்டுவதோடு தரைப்பகுதியில் தண்ணீர் தேக்கம் ஏற்பட்டு பயணியர் அவதிபடுகின்றனர். எனவே, வாலாஜாபாத் பேருந்து நிலைய பயணியர் நிழற்குடை கட்டடத்தில் பழுதான கூரைகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் உள்ளிட்ட பல தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story