பட்டுக்கோட்டையில் சீத்தாராம் யெச்சூரி நினைவு தினம்

X
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு அலுவலகத்தில், மறைந்த சிபிஎம் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமையில், அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில், ரெ.ஞானசூரியன், முருக.சரவணன், கே.பெஞ்சமின், மகாலிங்கம், பாண்டியன், அபெக்ஸ் சுரேஷ், சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

