ஸ்ரீ வேணுகோபால் சுவாமி ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்.

X
ஆரணி அடுத்த அரியப்பாடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பாமா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபாலசுவாமி ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக புண்யாவாசனம், ஸங்கல்பம், கலச பூஜை ஹோமம், புர்ணாவதி, விஸ்வரூபம், கோ பூஜை, புண்யாவாசனம், ஹோமம், மகாபூர்ணாஹூதி, கலச புறப்பாடு புறப்பட்டு ஆலயத்தின் கோபுரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கலந்துகொண்டு வழிபட்டார். உடன் ஒன்றியசெயலாளர் ஜெயப்பிரகாஷ், நகரசெயலாளர் அசோக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
Next Story

