ஆரணியில் மோட்டார்சைக்கிள்களை திருடிய வாலிபர் கைது.
ஆரணி பெரியகடைவீதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் இருசக்கர வாகனம் திருடுபோனது குறித்து அண்மையில் ஆரணி நகர போலீஸில் புகார் கொடுத்தார். மேலும் சேத்துப்பட்டு அருகே ஆதியந்தாங்ல் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் ஆரணி நகரில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுவருவதற்கும் திருடுபோயிருந்தது. இது குறித்தும் ஆரணி நகர போலீஸில் புகார் கொடுத்திருந்தார். ஆரணி நகர போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். மேலும் எஸ்.பி.சுதாகர், ஆரணி டிஎஸ்பி உத்தரவின்பேரிலும், ஆரணி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அகிலன் வழிகாட்டுதலின்பேரில் ஆரணி நகர எஸ்.ஐ ஆனந்தன், சிறப்பு எஸ்.ஐ கன்றாயன் மற்றும் போலீஸார்கள் முருகன், அருணகிரி, வாகித், பட்டுசாமி ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின்பேரில் ஒருவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதின்பேரில் அந்த வாலிபரை ஆரணி நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை செய்தனர். அப்போது ஆரணி அடுத்த இரும்பேடு இந்திராநகர் சேர்ந்த சங்கர் மகன் ஜெயசீலன்(40) என்பவர் ஆரணி நகரில் 4 இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரியவந்தது. பின்னர் 4 மோட்டார்சைக்கிள்களையும் பறிமுதல் செய்து ஜெயசீலனை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
Next Story



