மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி.

X
மதுரை மாவட்டம் வன்ணிவேலம்பட்டி சின்னராட்டிபட்டி நடுத்தெருவை சேர்ந்த தங்கராஜின் மகன் பிரபாகரன்( 35) என்பவர் மின்சார வாரியத்தில் தினக் கூலியாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று( செப்.12) காலை 11மணியளவில் ஆலங்குளம் மந்தை விநாயகர் கோவில் அருகே உள்ள மின்கம்பத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அவரது மனைவி இராமுதாய் பெருங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

