கோவையில் உயர்ரக போதைப் பொருள் கடத்தல்: நான்கு பேர் சிறையில் அடைப்பு !

X
கோவை சரவணம்பட்டி துடியலூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஐந்து பேரை சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் ரூ.3 லட்சம் மதிப்பிலான 7 கிராம் மெத்தாபேட்டமைன் மற்றும் குஷ் எனப்படும் உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கணபதியைச் சேர்ந்த அமர்நாத், மணிகாரம்பாளையத்தைச் சேர்ந்த கதிர்வேல், சக்தி முகேஷ், கோவில்மேட்டை சேர்ந்த தஷ்வந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுடன் இருந்த அஸ்வின் தப்பியுள்ளார். போதைப்பொருளை பெங்களூரில் இருந்து வாங்கி வந்தது விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அமர்நாத் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன என போலீசார் தெரிவித்தனர்.
Next Story

