ராணிப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நினைவஞ்சலி

X
ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், சீத்தாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், மறைவுக்குப் பின்னரும் மானுட மேம்பாட்டிற்காக மாபெரும் உடல் தானம் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. கட்சியின் தொண்டர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
Next Story

