ஓசூரில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் உயிரிழப்பு.

ஓசூரில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் உயிரிழப்பு.
X
ஓசூரில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் உயிரிழப்பு.
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அகிபூர் ரகுமான் (27) இவர் ஓசூர் பேகேப்பள்ளி எழில் நகரில் தங்கி பெயிண்டர் வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த 8-ஆம் தேதி அன்று இவர் கோவிந்த அக்ரஹாரம் சர்க்கிள் பகுதியில் உள்ள புதிய வீடு ஒன்றிற்கு பெயிண்டு அடிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் அங்கிருந்த மின் சார ஒயரை தொட்டதாக கூறப்படுகிறது. இதில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து அகிபூர் ரகுமான் தூக்கி வீசப்பட்டார். இதைக் கண்ட அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு உடனடியாக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி அகிபூர் ரகுமான் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story