கோல்டன் கேட்ஸ் வித்யாஷ்ரம் பள்ளியில் மாணவர்களின் தொழிலதிபர் தினம்
பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியில் 13.9.2025 சனிக்கிழமை அன்று தொழிலதிபர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோல்டன் கேட்ஸ் பள்ளிக் குழுமத் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் அங்கையற்கண்ணி, துணைத்தலைவர் ஹரீஷ் ரவிச்சந்திரன் வருகை புரிந்தார்கள். முதல்வர் பவித், மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் முன்னிலையில் விழா தொடங்கப்பட்டது. தொழில் முனைவோர் என்பவர் ஒரு நிறுவனத்திற்கு சொந்தக்காரர் அத்தொழில் முயற்சியில் வரக்கூடிய சிக்கல்களுக்கு துணிச்சல் முயற்சி மற்றும் சிந்தனை கொண்டு செயல்பட வேண்டும் என்பதை பள்ளி மாணவர்கள் உணர வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர் அழகு சாதன கடைகள், எழுது பொருள்கள் கடைகள், உணவு விடுதிகள், திரையரங்குகள் விளையாட்டு மையங்கள்,மருத்துவ செய்முறை பயிற்சி கூடங்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். பெற்றோர்களும், மாணவர்களும் பார்வையாளர்களும் கண்டு களித்து மகிழ்வுடன் பொருட்களை வாங்கிச் சென்றனர். இந்த நிகழ்வு மூலமாக வருங்கால தலைவர்களுக்கு தொழிலை மேம்படுத்துவதற்கான முதல் அடியெடுத்து வைத்துள்ள மாணவர்களுக்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Next Story








