தங்க நகை வைத்திருந்த கைப்பையை தவறவிட்ட பெண்ணிடம் மீட்டு ஒப்படைத்த போலீசார்

X
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நிலக்கோட்டை செல்லும் பெண் ஒருவர் தனது கைப்பையில் ஒரு செட் தோடு, ஒரு செட் மூக்குத்தி வைத்திருந்தார். அந்தக் கைப்பையை பேருந்தில் ஏறும் அவசரத்தில் தவறவிட்டார். பின்பு தனது கைப்பை காணாததை கண்ட அவர் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் அழகுராஜா, சரவணன் ஆகியோரிடம் இது குறித்து தெரிவித்தார். போலீசார் அப்பகுதிகளில் நீண்ட நேரம் தேடி பேருந்துக்கு அடியில் இருந்த பையை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்தனர். அந்தப் பெண் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.
Next Story

