ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வட மாநில வாலிபர் தற்கொலை

X
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே தனியார் நுாற்பாலையில் பீஹார் மாநிலம் முஜாபூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜன்குமார்(23) என்பவர் பணிபுரிந்து வந்தார். ஆன்லைன் டிரேடிங் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த இவர் செப்டம்பர் 7-ம் தேதி வாங்கிய சம்பள பணம் அனைத்தையும் சூதாட்டத்தில் இழந்து விட்டார் குடும்பத்திற்கு மாதம்தோறும் அனுப்பும் பணத்தையும் அனுப்பவில்லை. என்ற மன உளைச்சலில் விடுதியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேற்படி சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

