வால்பாறையில் குளுகுளு சீசன் – சுற்றுலாப் பயணியர் வருகை அதிகரிப்பு !

வால்பாறையில் குளுகுளு சீசன் – சுற்றுலாப் பயணியர் வருகை அதிகரிப்பு !
X
வால்பாறையில் சாரல் மழை – பனிமூட்டம் – லேசான வெயில்: சுற்றுலாப் பயணியர் உற்சாகம்.
பருவமழைக்குப் பின் வால்பாறையில் நிலவும் குளுகுளு சீதோஷ்ணம் சுற்றுலாப் பயணியரை அதிக அளவில் ஈர்த்துள்ளது. வெயிலுடன் சாரல் மழை, பனிமூட்டம் என இயற்கையின் அழகை கண்டு ஆயிரக்கணக்கானோர் வால்பாறைக்கு வருகை தருகின்றனர். சக்தி–தலனார் சாலை வியூ பாயின்ட், நல்லமுடி, சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, சோலையாறு அணை, அட்டகட்டி ஆர்கிட்டோரியம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பெருமளவில் கூடுகின்றனர். இதேவேளை, சோலையாறு அணை நீர்பிடிப்பு பகுதியாக உள்ள சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சாரல் மழை, பனிமூட்டம், லேசான வெயில் என குளுகுளு சூழலை ரசித்து சுற்றுலாப் பயணியர் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
Next Story