அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்
Pallipalayam King 24x7 |13 Sept 2025 7:12 PM ISTபள்ளிபாளையம் அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி காகித ஆலையில் நடைபெற்றது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், பாப்பம்பாளையம், கொக்கராயன்பேட்டை,வெடியரசம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் 10 -மற்றும் 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா பள்ளிபாளையம் எஸ.பி.பி காகித ஆலை வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் சோமயாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 30 மாணவ,மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார். தொடர்ந்து மாணவர்களை சிறப்பாக உருவாக்கிய தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது..இவ்விழாவில் எஸ்.பி.பி காகித ஆலை தலைவர் கோபால ரத்தினம்,ஆடிட்டர் சுரேஷ், பொது மேலாளர் அழகர்சாமி உள்பட பலர் பங்கேற்றனர் . ஊடக செய்தி ஒருங்கிணைப்பு பணியை PRO ரமணன் செய்திருந்தார். இந்த நிகழ்வில் பள்ளி மாணவ மாணவியர் ,பள்ளி தலைமை ஆசிரியர்கள் காகித ஆலை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story


