நாட்றம்பள்ளி அருகே கடன் கொடுத்தவர் தொந்தரவால் அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர் விஷம் குடித்து தற்கொலை

நாட்றம்பள்ளி அருகே கடன் கொடுத்தவர் தொந்தரவால் அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர் விஷம் குடித்து தற்கொலை
X
நாட்றம்பள்ளி அருகே கடன் கொடுத்தவர் தொந்தரவால் அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர் விஷம் குடித்து தற்கொலை
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கடன் கொடுத்தவர் தொந்தரவால் அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர் விஷம் குடித்து தற்கொலை தற்கொலைக்கு காரணமானவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்* திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேரூராட்சிக்குட்பட்ட சந்தை பனந்தோப்பு நேருதெரு பகுதியை சேர்ந்தவர் விஜயன் என்பவரின் மனைவி ரமணி இவர் ஆத்தூர் குப்பம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார் இவரது கணவர் விஜயன் நாட்றம்பள்ளி பேரூராட்சியில் தூய்மை பணியாளராக உள்ளார் இவர்களுக்கு 3 மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் ரமணியின் மகன் பாரத் என்பவர் குடும்ப அவசர தேவைக்காக ஏரிக்கோடி பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவரிடம் கடந்த மாதம் ரூ.5 ஆயிரம், 10 ரூபாய் வட்டிக்கு கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ராஜசேகர் தனது நண்பர்களுடன் மது போதையில் ரமணியின் வீட்டிற்கு சென்று கொடுத்த பணத்தை கேட்டுள்ளார் . இதனால் ரமணி தனது மகன் குடியாத்தம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளதால் வந்தவுடன் தருவதாக தெரிவித்தும், தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் ரமணியையும் அவரது கணவர் விஜயமையும் தாக்கியுள்ளனர். மேலும் அன்றைய தினம் தனியார் நிதி நிறுவனங்களில் இருந்தும் கடன் வசூலிக்க ரமணியிடம் பணத்தைக் கேட்டு எச்சரித்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரமணி இரவு நேரத்தில் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் சுயநினைவின்றி விழுந்து கிடந்தார். பின்னர் இதை அறிந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இது குறித்து இவரது கணவர் விஜயன் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை முடிந்து வீட்டிற்கு சடலம் வந்த நிலையில் ரமணியின் தற்கொலைக்கு காரணமான நபரை கைது செய்யக்கோரி குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் நாட்றம்பள்ளி - வாணியம்பாடி நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்த தகவல் அறிந்த நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது கடன் கொடுத்தவர் தொந்தரவால் அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Next Story