தேங்கல்பாளையம் காந்தி கல்வி நிலையம் உயர்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் - ஆசிரியர்கள் சந்திப்பு மற்றும் ஆசிரியர் தின விழா..

X
Rasipuram King 24x7 |13 Sept 2025 9:07 PM ISTதேங்கல்பாளையம் காந்தி கல்வி நிலையம் உயர்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் - ஆசிரியர்கள் சந்திப்பு மற்றும் ஆசிரியர் தின விழா..
1914-2024-ம் கல்வி ஆண்டில் படித்த முன்னாள் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் சந்திப்பு மற்றும் ஆசிரியர் தின விழா பள்ளியில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த தேங்கல்பாளையம் காந்தி கல்வி நிலையம் உயர்நிலை பள்ளியில் 111 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கடந்த 1914 ஆம் ஆண்டு ஸ்ரீ சரஸ்வதி விலாஸ் தொடக்கப் பள்ளியாக துவங்கப்பட்டது. 1962 ஆம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பின்னர் 1969 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி அவர்களின் நூறாவது பிறந்தநாளில் காந்தி கல்வி நிலையம் நடுநிலைப் பள்ளியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மீண்டும் 1984 ஆம் ஆண்டு காந்தி கல்வி நிலையம் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. மாணவ-மாணவிகள் வாட்ஸ்அப் குழு மூலம் ஒன்றிணைந்து முன்னாள் மாணவர்கள், ஆசிரியர் பெருமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மட்டுமன்றி அப்போது பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களையும், அலுவலக பணியாளர்களையும், தற்போதைய ஆசிரியர்களையும் குடும்பத்தோடு பங்கேற்று அந்த காலகட்டத்தில் நிகழ்ந்த பழைய நினைவு களை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டனர். மேலும் தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர் பெருமக்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் இரா. சுப்பிரமணியம் வரவேற்புரை ஆற்றினார். காந்தி கல்வி நிலைய பள்ளி முன்னாள் மாணவர், பணி நிறைவு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர், அண்ணாமலை பல்கலைக்கழகம் மேனாள் செனட் உறுப்பினர் மற்றும் அகாடமிக் கவுன்சில் உறுப்பினர் முனைவர் மு.ஆ.உதயக்குமார் மற்றும் காந்தி கல்வி நிலைய பள்ளி முன்னாள் மாணவர் நேர்முக உதவியாளர் முதன்மை கல்வி அலுவலர் முனைவர் வெ. சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட பள்ளியின் சார்பில் ராஜ்மோகன், செல்வலட்சுமி டிரேடர்ஸ் நாகராஜன், வெண்ணந்தூர் ஒன்றிய கழகச் செயலாளர் ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.எம் துரைசாமி, முன்னாள் ஆர்டிஓ கருப்பண்ணன், தேங்கல்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி, முன்னாள் தலைமை ஆசிரியர் குமாரசாமி, முன்னாள் ஆசிரியர் பெருமக்கள் அத்தியப்பன், நல்லதம்பி, பூபாலன், தேவராஜன், கமலம், அப்பு, அனுசுயா, தங்கராஜ், ருக்குமணி, பெரியம்மாள், விவேகானந்தன், பழனிசாமி, லோகநாதன், நிகழ்ச்சி தொகுப்பாளர் சிவானந்த பள்ளி ஆசிரியர் முருகேசன், மற்றும் நன்றியுரை சிவானந்த பள்ளி ஆசிரியர் ராஜேந்திரன் முன்னாள் மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மற்றும் அவர்களது குடும்பத்தினர் என பலர் கலந்துகொண்டனர்.
Next Story
