மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் விளையாட்டு போட்டி: வாழ்க்கையில் சிறந்து விளங்க விளையாட்டு முக்கியம் டிஎஸ்பி விஜயகுமார் பேச்சு..

மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் விளையாட்டு போட்டி:  வாழ்க்கையில் சிறந்து விளங்க விளையாட்டு முக்கியம்  டிஎஸ்பி விஜயகுமார் பேச்சு..
X
மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் விளையாட்டு போட்டி: வாழ்க்கையில் சிறந்து விளங்க விளையாட்டு முக்கியம் அதே அளவில் கல்வி ஒழுக்கம் மாணவர்கள் கற்று இருக்க வேண்டும் டிஎஸ்பி விஜயகுமார் பேச்சு...
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே மசக்காளிப்பட்டியில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா, கல்வி குழும சேர்மன் கே. சிதம்பரம், அவர்கள் தலைமையில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் எஸ். மோகன் குமார், அனைவரையும் வரவேற்றார். பள்ளியின் கல்வி இயக்குநர் பி. சுப்பிரமணியன், இயக்குநர் ஆர். மணிவண்ணன், பள்ளியின் துணைத் தலைவர் ஆர். மணீஷ்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை விருந்தினராக ராசிபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பங்கேற்று, விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார். இதில் கராத்தே, பிரமிட், நடனக் நிகழ்ச்சிகள் மற்றும் கண்ணைக் கவரும் வகையில் பல்வேறு கூட்டு பயிற்சிகள், விளையாட்டு ஆகிய போட்டிகளில், மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில் சிறப்பு விருந்தினராக இராசிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் டிஎஸ்பி விஜயகுமார் மாணவர்களிடத்தில் பேசுகின்ற பொழுது விளையாட்டுப் போட்டிகளில் சிறு வயது முதல் ஆர்வமாக இருந்த காரணத்தினால் எந்த தீய பழக்கங்களும் இல்லாமல் இப்பொழுது வரை என்னால் இருக்க முடிகிறது. அதற்கு காரணம் விளையாட்டு. விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் என்றால் குறித்த நேரத்தில் தூங்கச் செல்வதும் அதிகாலையில் எழுந்து விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபட்டால் தான் விளையாட்டுத்துறையில் சாதிக்க முடியும். ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கக் கூடிய இடம் விளையாட்டு மைதானம் தான். அதே வேளையில் மாணவர்கள் கல்விக்கும், ஒழுக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும். தற்பொழுது போதைப் பொருட்கள் அதிக அளவில் இருப்பதால் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை பொறுப்புடன் கவனித்துக் கொள்ள வேண்டும், விளையாட்டுத் துறையில் எந்த அளவுக்கு ஆர்வம் இருக்கிறதோ அதே அளவுக்கு கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும், இயற்கைக்கு மாறாக எது செய்தாலும் நமது உடம்பு வீணாகிவிடும். நேரத்திற்கு தூங்கி அதிகாலை நேரத்தில் எழுந்து படிக்க வேண்டும் அதை கவனத்தில் கொள்ள வேண்டும். இன்று விளையாட்டுத்துறையில் அதிகமான வாய்ப்புகள் உள்ளது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்குச் செல்லும் பொழுதும் பள்ளி விட்டு வரும் பொழுதும் யாருடன் பழகுகிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும், இன்று 14 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது. கொலை குற்றங்களை விட இதில் தண்டனைகள் அதிகம். நமது நாமக்கல் மாவட்டத்தில் ஒன்பதாவது படிக்கும் மாணவி சிறுவயதிலேயே பல இன்னல்கள் ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் முதலில் தங்கள் குழந்தைகளை ஆசிரியர்கள் அடிக்கிறார்கள் என்றால் எதற்காக அடிக்கிறார்கள் என்று கேட்க வேண்டும். பெற்றோர்கள் ஏன் என் பிள்ளைகளை அடிக்கிறீர்கள் என்று கேட்டால் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பாவத்தை சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். அதேபோன்று ஆசிரியர்களும் மாணவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். குழந்தைகளுக்கு ஒழுக்கம் நன்றாக இருந்தால்தான் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குச் செல்ல முடியும் எனவே பெற்றோர்கள் ஆசிரியர்கள் அடிக்கிறார்கள் என்றால் அவர்களின் நன்மைக்குத்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று பேசினார். தொடர்ந்து விளையாட்டுப் போட்டியில் ஜோதியை ஏற்றி வைத்தும், ஒலிம்பிக் கொடியை ஏற்றினார்.மாணவ மாணவிகளின் அணி வகுப்பு மரியாதையும் ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள், உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.
Next Story